பெண்ணின் ஓட்டை யாரோ கள்ள ஓட்டாக போட்டதால் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

பெண்ணின் ஓட்டை யாரோ கள்ள ஓட்டாக போட்டதால் அதிகாரிகளுடன் வாக்குவாதம்
பெண்ணின் ஓட்டை யாரோ கள்ள ஓட்டாக போட்டதால் அதிகாரிகளுடன் வாக்குவாதம்
Published on

மயிலாடுதுறையில் 10-வது வார்டில் பெண் ஒருவரின் ஓட்டை, யாரோ கள்ள ஓட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இங்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 10-வது வார்டு கவிஞர் வேதநாயகம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் மூன்று வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் வாக்குச்சாவடி எண் 12-இல் ஈவேரா தெருவைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மனைவி செல்வி (55) என்ற பெண் வாக்களிக்க வந்துள்ளார்.

அப்போது அவரது வாக்கை ஏற்கெனவே செலுத்தி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தான் வாக்கு செலுத்தவில்லை என்று அதிகாரிகளிடம் கூறினார். பின்னர் அவரது உறவினர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் மற்றும் அதிமுகவினர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

"எங்களுக்கு வழங்கப்படும் பூத் சிலிப் சரியாக அச்சிடப்படவில்லை. மேலும் வருபவர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து வருவதால் யார் என்று தெரியவில்லை" என்று முகவர்கள் மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அந்த பெண்மணிக்கு மாற்று ஓட்டு வழங்கப்பட்டது. இதனால் 20 நிமிடம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com