"அதிமுகவும் பாஜகவும் ரெட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட ரயில் போல அரவக்குறிச்சி வளர்ச்சிக்கு பாடுபடுவோம்" என்றார் பாஜக வேட்பாளர் அண்ணாமலை.
அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் துணைத் தலைவர் அண்ணாமலை இன்று காலை பாஜக நிர்வாகிகள் புடைசூழ சைக்கிளில் வந்து அரவக்குறிச்சி தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "200 தொகுதிகளில் அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்வராகி, தமிழகத்தில் இறையாட்சியை ஏற்படுத்துவார். இதற்கு அரவாக்குறிச்சி முக்கிய திருப்புமுனையாக இருக்கும். அதிமுகவும் பாஜகவும் ரெட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட ரயில் போல அரவக்குறிச்சி வளர்ச்சிக்கு பாடுபடுவோம்
திமுகவினர் அராஜகமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று முடிவு கட்டுவோம்.
அதிமுக - பாஜக கூட்டணிக்கு மிகப் பெரிய அளவில் அலை உருவாகி உள்ளது. எனவே கரூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளிலும் அதிமுக - பாஜக கூட்டணி நண்பர்கள் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குச் செல்வார்கள்" என்றார் அண்ணாமலை.