அண்ணா 20 ஆண்டுகள் கூடுதலாக வாழ்ந்திருந்தால் இந்தியாவின் சரித்திரத்தையே மாற்றியிருப்பார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி மதிமுக சார்பில் தஞ்சையில் மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய வைகோ, அண்ணா இருந்திருந்தால் தனி ஈழம் பிறந்திருக்கும் என்றும், திராவிட இயக்கம் ஊழலுக்கு ஆளாகி இருக்காது என்றும் தெரிவித்தார். நதிகளை இணைக்கும் முயற்சிகள் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்திய வைகோ, அரசியலுக்கு வருவதாக கூறிக் கொண்டிருக்கும் நடிகர்கள் கூட நதிகள் இணைப்பை பற்றி பேச ஆரம்பித்துவிட்டதாக அவர் கூறினார். மாநில சுயாட்சியை முன்வைத்து நவம்பர் 20ஆம் தேதி சென்னையில் மாநாடு நடத்தப்படும் என்றும் வைகோ கூறினார்.