``போச்ச்சே போச்ச்ச்சே...”- முதலையை படமெடுத்த ட்ரோனுக்கு நேர்ந்த கதி... திக் திக் நொடிகள்!

``போச்ச்சே போச்ச்ச்சே...”- முதலையை படமெடுத்த ட்ரோனுக்கு நேர்ந்த கதி... திக் திக் நொடிகள்!
``போச்ச்சே போச்ச்ச்சே...”- முதலையை படமெடுத்த ட்ரோனுக்கு நேர்ந்த கதி... திக் திக் நொடிகள்!
Published on

ஃபோட்டோகிராஃபி என்றதுமே பெரும்பாலானோரின் நினைவுக்கு எட்டுவது, WildLife (வனவிலங்குகள் தொடர்பான) ஃபோட்டோகிராஃபியாகத்தான் இருக்கும். காரணம் அதில்தான் காடு, மலை என சுற்றிச் சுற்றி ஃபோட்டோ எடுக்கலாம், ஊரெல்லாம் சுற்றி பார்த்தா மாதிரியும் ஆச்சு, பிடித்தமான வேலையை பார்த்தா மாதிரியும் ஆச்சு என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம் என்றெல்லாம் கலர் கலரான எண்ணங்களெல்லாம் தோன்றும்.

ஆனால், உண்மையில் அந்த வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராஃபி வேலை அத்தனை எளிதான வேலையாக இருந்திடாது. அடர் வனத்துக்குள் விலங்குகளை ஃபோட்டோ எடுப்பதற்காக இலை, தழையாக மாறி பதுங்கி பதுங்கி இருப்பது அத்தனை சாதாரணமான காரியமாக இருக்காது. துல்லியமான ஃபோட்டோ எடுக்கும் வரைக்கும் ஃபோட்டோகிராஃபர்ஸ் மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டி வரும்.

அதுவும் நடமாடும் விலங்குகளை காட்டிலும் ஊர்வன, பறப்பன உயிரினங்களை ஃபோட்டோ, வீடியோ எடுக்க தவம்தான் இருக்க வேண்டும் போல என ஃபோட்டோகிராஃபர்ஸையே எண்ண வைக்கும். அதிலும் முதலைகள் போன்ற பயங்கரமான ஊர்வன உயிரனங்களை capture செய்வதெல்லாம் சற்று திக் திக் நொடிகளாகத்தான் இருக்கும். இப்படியாக வீடியோ எடுக்க முதலைக்கு மேலே ட்ரோனை பறக்க விட்ட போது எதிர்பாராத விதமாக நடந்த சம்பவத்தின் வீடியோதான் ட்விட்டர்வாசிகளை அலற விட்டிருக்கிறது.

அதன்படி, தண்ணீரில் ஊர்ந்துக் கொண்டிருந்த முதலைக்கு பக்கத்திலேயே கேமராமேன் ஒருவர் ட்ரோன் மூலம் அதனை கண்காணித்து வீடியோ எடுத்துக் கொண்டிருக்க, அந்த ட்ரோனையே முதலை சுற்றிமுற்றி பார்த்துக் கொண்டிருந்தது. பறவை போல அந்த ட்ரோன் அங்கும் இங்கும் பறந்ததால் இதனைக் கண்ட முதலை கப்பென எகிறி ட்ரோனை விழுங்கியிருக்கிறது.

அனுபவம் வாய்ந்த ஃபுட்பால் கோல் கீப்பரை போல அந்த ட்ரோனை முதலை விழுங்கிய அந்த வீடியோவை இதுவரைக்கும் 11 லட்சத்துக்கும் மேலானோர் பார்த்திருக்கிறார்கள். இதை பார்த்த நெட்டிசன்கள், “இப்படி அந்த ட்ரோனை முதலை விழுங்கும் என எதிர்ப்பார்க்கவே இல்லை.” , “கேமிராமேனோட நிலைமைய நினைச்சாதான் பாவமா இருக்கு” , “விலங்குகளுக்கும் ப்ரைவசி முக்கியம் என்பதுதான் இந்த சம்பவம் உணர்த்தும் பாடமாக இருக்கிறது” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com