சளி மற்றும் இருமலா? : வெங்காயம் டீ குடிச்சா போதும்.. !

சளி மற்றும் இருமலா? : வெங்காயம் டீ குடிச்சா போதும்.. !
சளி மற்றும் இருமலா? : வெங்காயம் டீ குடிச்சா போதும்.. !
Published on

உடலில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த நமது தாத்தா-பாட்டி, பெற்றோரின் வீட்டுமுறை வைத்தியங்களை நம்ப வேண்டும். அப்போதைய காலகட்டங்களில் உடலில் தோன்றும் அனைத்து விதமான நோய்களுக்கும் இயற்கை முறையை சார்ந்தே நமது முன்னோர்களின் வைத்திய முறைகள் இருந்து வந்தன.

ஆனால் தற்போதையை காலகட்டத்தில் சாதாரண தலைவலியை கூட தாங்க முடியாமல் கெமிக்கல் மருந்து எடுத்துக்கொள்வதன் விளைவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வழியில்லாமல் பெரிய பெரிய தீர்க்க முடியாத நோய்களுக்கு வித்திடுவதாக இயற்கை வைத்தியத்தை சார்ந்திருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ளது. இந்த காலகட்டத்தில் அனைவருக்கும் சளி, இருமல், காய்ச்சல் வருவது வாடிக்கையான ஒன்றுதான். கால நிலைக்கு ஏற்றவாறு உடல் தன்னை தகவமைத்துக்கொள்ள செய்யும் முன்னேற்பாடுதான் இது என முன்னோர்கள் சொல்லிவைத்துள்ளனர்.

இந்நிலையில், வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மெக்னீசியம், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களில் வெங்காயம் விலைமதிப்பற்றது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். முன்னோர்கள் காட்டிய வீட்டு வைத்தியங்களில் ஒன்று வெங்காயம் டீ. இதை எப்படி செய்வது என்று தற்போது பார்க்கலாம்.

இந்த வெங்காய டீ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், இருமல், தொண்டை புண் மற்றும் மூக்கு ஒழுகுதல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒரு கப் நீரை சுடவைத்து அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும். அதில் 2-3 கருப்பு மிளகுத்தூள், ஒரு ஏலக்காய் மற்றும் அரை டீஸ்பூன் பெருஞ்சீரகத்தை சேர்க்க வேண்டும். வாணலியை மூடி, சுமார் 15-20 நிமிடங்கள் அந்த நீரை கொதிக்க விட வேண்டும். தேநீரை வடிகட்டி, எந்த இனிப்புடன் அல்லது இல்லாமல் குடிக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com