“வேடந்தாங்கலை சிதைக்க முனைவது கண்டனத்திற்குரியது” : டிடிவி தினகரன்

“வேடந்தாங்கலை சிதைக்க முனைவது கண்டனத்திற்குரியது” : டிடிவி தினகரன்
“வேடந்தாங்கலை சிதைக்க முனைவது கண்டனத்திற்குரியது” : டிடிவி தினகரன்
Published on

வேடந்தாங்கலை சிதைக்க முனைவது கண்டனத்திற்குரியது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

30 ஏக்கர் பரப்பளவு கொண்ட வேடந்தாங்கல் பாதுகாக்கப்பட்ட பகுதியை சுருக்குவதற்கு தமிழக அரசு முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனங்களை தெரிவித்திருந்தார். சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட வேடந்தாங்கல் பறவைகள் வாழிடப் பகுதியை, 3 கிலோ மீட்டர் அளவிற்குச் சுருக்க ஒப்புதல் அளிக்கக் கோரி, தேசிய காடுகள் உயிரியல் வாரியத்திடம், தமிழக அரசு கோரிக்கை விடுத்திருப்பதாகவும், இந்த முயற்சி வேதனையளிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள டிடிவி தினகரன், “வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய நிலத்தைச் சுருக்கி கட்டுமானங்களைச் செய்வதற்கு தமிழக அரசு முயற்சிப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. உலகம் முழுக்க சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல்லுயிர் பெருக்க மண்டலங்கள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், அப்படிப்பட்ட இடமான வேடந்தாங்கலை சிதைக்க முனைவது கண்டனத்திற்குரியது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு அனுமதியளிக்கக் கூடாது.” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com