தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் 10 இடங்களில் அம்மா பெட்ரோல் பங்குகள் அமைக்கப்பட இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.
உணவுத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. இதன்படி, சென்னையில் நந்தனம், சேலம் மாவட்டம் எடப்பாடி, தஞ்சாவூர் மாவட்டம் இரும்புத்தலை, திருவாரூர் சுந்தரகோட்டை, வேலூர் வாணியம்பாடி, நாகை மாவட்டம் கோவில்பத்து, மதுரை மாவட்டம் கப்பலூர், விழுப்புரம் வானூர், கரூர் கிருஷ்ணராயபுரம் மற்றும் திருச்சி மணப்பாறை ஆகிய இடங்களில் அம்மா பெட்ரோல் பங்குகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மா உணவகங்கள், அம்மா சிமெண்ட், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம் ஆகிய திட்டங்களைத் தொடர்ந்து தற்போது அம்மா பெட்ரோல் பங்குகள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்திய எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இந்த பெட்ரோல் பங்குகளை அமைக்கும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சட்டப்பேரவையில் அறிவித்தார்.