விஜயகாந்துக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்

விஜயகாந்துக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்
விஜயகாந்துக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்
Published on

செய்தியாளரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்துக்கு பிடிவாரண்ட் பிறக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி மதுரைக்கு செல்வதற்காக விஜயகாந்த் சென்னை விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது செய்தியாளர் ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு சலசலப்பானது. இதையடுத்து தன்னை தாக்கியதாக விஜயகாந்த் மீது அந்த செய்தியாளர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விஜயகாந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆலந்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் அப்போது விஜயகாந்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கு இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது. விஜயகாந்த் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளதால் வழக்கில் ஆஜராகவில்லை. இந்நிலையில் செய்தியாளரை தாக்கிய வழக்கில் விஜயகாந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com