கால்நடை தீவன ஊழல் வழக்கில் பாஜக லாலுவுக்கு அநீதி இழைத்து விட்டது என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.
கால்நடை தீவன ஊழலில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு விதிக்கப்பட்ட மூன்றரை ஆண்டு சிறை தண்டனை பற்றி உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவிடம் இன்று பத்திரிகையாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு பதிலளித்த அகிலேஷ் யாதவ், பாஜக லாலுவுக்கு அநீதி இழைத்து விட்டதாக கூறினார்.
அகிலேஷ் யாதவுடன் இருந்த சமாஜ்வாடி கட்சி தேசிய பொதுச்செயலாளர் ராம்சங்கர் வித்யார்தி, பாஜகவின் சதிவலையில் லாலு சிக்கி விட்டார். பாஜகவில் சேர்ந்திருந்தால் அவர் சிறைக்கு சென்றிருக்க மாட்டார். அவருக்கு உயர் நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன். பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது என்று கூறினார்.