ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கவில்லை என விசாரணை ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகியுள்ள எய்ம்ஸ் மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை நடைபெற்றது. ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழு வந்து சென்றது. அதனடிப்படையில், சம்மன் அனுப்பட்டிருந்ததை அடுத்து, எய்ம்ஸ் மருத்துவர்கள் நிதிஷ் நாயக், கில்னானி மற்றும் அஞ்சண்டிரிகா ஆகியோர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
அப்போது தாங்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கவில்லை என்றும் மேற்பார்வைப் பணிக்காகவே அழைக்கப்பட்டிருந்தோம் என மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர்.