மாணவர்களை அதிமுக அரசு குழப்பத்திலேயே வைத்திருப்பதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
கொரோனாத் தொற்றால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் 1 முதல் 10 வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெறுவதாகவும், கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் செய்யப்படுவதாகவும் அரசு அறிவித்தது.
இதனிடையே மாணவர்களின் நலன் கருதி, மாணவர்களுக்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் அந்தக் கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு அண்மையில் ஜேஇஇ மெயின் தேர்வுகளை நடத்தியது. இந்நிலையில் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வையும் வருகின்ற நாட்களில் நடத்த உள்ளது.
இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் அதிமுக அரசு மாணவர்களை குழப்பத்திலேயே வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.