“பல கட்சிகளுடன் கூட்டணி பேசுவது இயல்புதான்” - தம்பிதுரை

“பல கட்சிகளுடன் கூட்டணி பேசுவது இயல்புதான்” - தம்பிதுரை
 “பல கட்சிகளுடன் கூட்டணி பேசுவது இயல்புதான்” - தம்பிதுரை
Published on

தேர்தல் நேரத்தில் ஒரு கட்சி, கூட்டணி தொடர்பாக பல கட்சிகளுடன் பேசுவது‌ இயல்புதான் என்று அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவதில் இழுபறி நீடித்து வருகிறது. கூட்டணிக்கு வர தேமுதிக அதிக தொகுதிகள் கேட்பதாகவும், ஆனால் அதற்கு அதிமுக மறுப்பதால் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது. தேமுதிக நிர்வாகிகளான இளங்கோவன், அனகை முருகேசன் உள்ளிட்ட சிலர் சென்னை கோட்டூர்புரத்திலுள்ள துரை முருகன் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்குப் பின் பேசிய துரைமுருகன், தேமுதிக நிர்வாகிகள் சிலர் வீட்டிற்கு வந்து உங்களுடன் கூட்டணியில் சேர விரும்புவதாக தெரிவித்ததாக கூறினார். 

இதையடுத்து பேசிய சுதீஷ் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த துரைமுருகனும், நானும் பலமுறை சந்தித்து பேசியுள்ளோம். திமுக மற்றும் அதன் தலைமை குறித்து துரைமுருகன் என்னிடம் பலவற்றை பேசினார். அதை என்னாலும் கூற முடியும். ஆனால் அரசியல் நாகரிகம் கருதி அதை வெளிப்படுத்தமாட்டேன் என்று தெரிவித்தார். மேலும் தனிப்பட்ட காரணங்களுக்காகவே திமுக பொருளாளர் துரைமுருகனை நேற்று சந்தித்தோம் என்றும் அரசியல் காரணங்கள் இல்லை என்றும் தேமுதிக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தேர்தல் நேரத்தில் ஒரு கட்சி, கூட்டணி தொடர்பாக பல கட்சிகளுடன் பேசுவது‌ இயல்புதான் என்று அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, “ ஒரு கட்சி பல கட்சிகளுடன் கூட்டணி பேசத்தான் செய்யும். இதிலிருந்து தெரிகிறது திமுக எப்படிபட்ட கட்சி என்று. ஒரு கட்சி அரசியல் நாகரிகமாக பல கட்சிளிடம் பேசுவது வழக்கம். அதைவைத்து கொண்டு அநாகரிகமாக அதை வெளிப்படுத்தி அவமானப்படுத்துவதிலிருந்து திமுக எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com