எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசியுள்ளார்.
தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை டிசம்பர் 31-ம் தேதி ரஜினி வெளியிட்டார். தனிக்கட்சி தொடங்கி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாகவும் அவர் கூறினார். அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு வெளியானது முதல் ரஜினி அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார்.
நேற்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ரஜினி ஆசிபெற்றார். சென்னை கோபாலபுரம் இல்லத்தில் சுமார் 15 நிமிடம் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்நிலையில் இன்று எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசியுள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. தனது அரசியல் பிரவேசம் குறித்து ஆர்.எம்.வீரப்பனுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த 1996-ஆம் ஆண்டிலேயே ரஜினி அரசியலுக்கு வர விரும்பியவர் ஆர்.எம்.வீரப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.