“திமுக கூட்டணி தேர்தலில் வெற்றிபெறும்": ABP-சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தகவல்

“திமுக கூட்டணி தேர்தலில் வெற்றிபெறும்": ABP-சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தகவல்
“திமுக கூட்டணி தேர்தலில் வெற்றிபெறும்": ABP-சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தகவல்
Published on

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெறும் என ABP- சி வோட்டர் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணி 43% வாக்குகளை பெற்று 161 முதல் 169 தொகுதிகளில் வெற்றிபெறும் எனவும் அதிமுக தலைமையிலான கூட்டணி 30.6% வாக்குகளுடன் 53 முதல் 61 தொகுதிகளையே எனவும் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி 7% வாக்குகளை பெற்று 2 முதல் 6 இடங்களிலும் அமமுக கட்சி 6.4% வாக்குகளுடன் 1 முதல் 5 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளதாக ABP- சி வோட்டர் கருத்துக்கணிப்பு கூறுகிறது.

பிற கட்சிகள் 12.3% வாக்குகளுடன் 3 முதல் 7 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாக இக்கணிப்பு தெரிவித்துள்ளது. அடுத்த முதலமைச்சராக யார் வர வேண்டும் என விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு 40 சதவிகிதம் பேர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாகவும் 29.7% பேர் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழக வாக்காளர்களில் 48% பேர் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகவும், தமிழக மக்களின் மிக முக்கியமான பிரச்னை எது என்ற கேள்விக்கு 32.8% பேர் வேலைவாய்ப்பின்மை என்பதையே பிரதானமாக சுட்டிக்காட்டியுள்ளனர். மின்சாரம், குடிநீர் பிரச்னை நிலவுவதாக 11.6% பேரும் 10.4% பேர் சட்டம் ஒழுங்கு பிரச்னை இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com