புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாரதிய ஜனதா - அதிமுக கூட்டணி ஆட்சியமைக்கும் என ABP-சி வோட்டர் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
தற்போது குடியரசுத்தலைவர் ஆட்சி நடைபெற்று வரும் புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக - அதிமுக கூட்டணி 45.4% வாக்குகளுடன் 16 முதல் 20 இடங்களில் வெல்லக்கூடும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் - திமுக கூட்டணி 40.7% வாக்குகளுடன் 10 முதல் 14 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது.
கேரளாவில் தற்போது ஆட்சியில் உள்ள இடதுசாரி கூட்டணியும் அசாமில் பாரதிய ஜனதாவும் மீண்டும் ஆட்சியமைக்கும் என கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தை பொருத்தவரை ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அதிக இடங்களில் வெல்லும் என்றும் அதே நேரம் அக்கட்சிக்கு பாஜக கடும் போட்டி கொடுக்கும் என்றும் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது