மதுரையில் பெட்டிப் பெட்டியாக பறிமுதல் செய்யப்பட்ட குக்கர்கள்

மதுரையில் பெட்டிப் பெட்டியாக பறிமுதல் செய்யப்பட்ட குக்கர்கள்
மதுரையில் பெட்டிப் பெட்டியாக பறிமுதல் செய்யப்பட்ட குக்கர்கள்
Published on

மதுரை அருகே ரூ.5.29 லட்சம் மதிப்புள்ள 500க்கும் அதிகமான குக்கர்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடக்கும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்குகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் தொடங்கி தேர்தல் பறக்கும்படையினர், நாடு முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், மதுரை அருகே ரூ.5.29 லட்சம் மதிப்புள்ள 500க்கும் அதிகமான குக்கர்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மதுரை அருகே காரைக்கிணறு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து மதுரையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு 125 பெட்டிகளில் 500க்கும் மேற்பட்ட குக்கர்களை ஏற்றி வந்த வாகனத்தை சோதனை செய்தனர். 

அப்போது மதுரையில் உள்ள மண்டபங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு கொண்டு செல்வதாக வேனில் வந்தவர்கள் தெரிவித்தனர். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் அவர்களில் இல்லை. அதனால் வாகனத்தை பறிமுதல் செய்து மதுரை வட்டாச்சியர் அலுவலகத்திற்கு அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர். 

உரிய ஆவணங்கள் இல்லாமல் திருமண மண்டபங்களுக்கு குக்கர்களை கொண்டு செல்வதால் வாக்காளர்களுக்கு அளிக்க குக்கர்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றன. 

இதனிடையே மக்களவைத் தேர்தல், தமிழக இடைத்தேர்தலுக்கு குக்கர் சின்னத்தை பொது சின்னமாக ஒதுக்கக்கோரி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைகால மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இதுவரை பதிவு செய்யப்படாததால் சுயேச்சையாகவே கருதுவதாகவும் இதனால், பொதுச்சின்னம் கொடுக்க முடியாது என்றும், தனித்தனி சின்னம்தான் ஒதுக்க முடியும் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் குக்கர் சின்னத்தை ஒதுக்க மறுத்துவிட்டனர்.இருந்தாலும் பொதுச் சின்னத்தை வழங்க பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தர விட்டனர். அதன்படி டிடிவி தினகரன் தற்போது பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com