18000 கிலோ எடை; ஜி20 மாநாட்டின் முகப்பில் வைக்க சுவாமிமலையில் பிரத்யேகமாக செய்யப்பட்ட நடராஜர் சிலை

நடராஜர் சிலையின் மொத்த எடை 18000 கிலோ (18டன்) இந்த நடராஜனின் உயரம் 28 அடி அகலம் 21 அடி இந்த பிரம்மாண்ட சிலையை சுவாமி மலையில் உள்ள சிற்பக் கூடத்தில் இருந்து டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நடராஜர் சிலை
நடராஜர் சிலைWebTeam
Published on

ஜி-20 மாநாட்டு முகப்பில் வைப்பதற்கு கும்பகோணம் அருகே சுவாமி மலையில் உள்ள சிற்ப கூடத்தில் இருந்து நடராஜர் சிலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சிற்பக் கூடத்தில் ஜி 20 மாநாட்டு முகப்பில் வைப்பதற்கு இந்திய அரசு கலாச்சாரத்துறை அமைச்சகம் சார்பில் ஒரு நடராஜர் சிலை ஆர்டர் செய்யப்பட்டிருந்தது. இந்த நடராஜர் சிலை இன்று ராட்சத கிரேன் மூலம் லாரியில் ஏற்றப்பட்டு டெல்லிக்கு புறப்பட்டது.

இந்த நடராஜர் சிலையின் மொத்த எடை 18000 கிலோ (18டன்). இந்த நடராஜனின் உயரம் 28 அடி அகலம் 21 அடி. இந்த பிரம்மாண்ட சிலையை சுவாமி மலையில் உள்ள சிற்பக் கூடத்தில் இருந்து டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த பிரம்மாண்ட சிலையை இரண்டு ராட்சத கிரேன்கள் மூலம் லாரியில் ஏற்றப்பட்டது. மேலும், இந்த சிலையின் பீடமும் அனுப்பி வைக்கப்பட்டது.

WebTeam

இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன் உலகிலேயே மிக உயரமான நடராஜர் சிலை சுவாமி மலையில் உள்ள சிற்பக் கூடத்தில் வடிவமைக்கப்பட்டு வேலூர் பொற்கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com