2ஜி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் இன்று சென்னை திரும்புகின்றனர். விமானநிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதால் ஆ.ராசா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 14 பேரையும் விடுவிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
இந்நிலையில் 2ஜி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் இன்று சென்னை திரும்புகின்றனர். விமானநிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் வரவேற்கிறார். இதையடுத்து, கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகனை அண்ணா அறிவாலயத்திலும், கட்சித் தலைவர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்திலும் சந்தித்து அவர்கள் வாழ்த்து பெறுகின்றனர். அதன்பிறகு சிஐடி காலனியில் உள்ள தனது இல்லத்திற்குச் செல்லும் கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.