Gen Z தலைமுறையில் காதலிப்பதற்கு எத்தனையோ வழிகள் இருந்தாலும் இன்றளவும் ஒருவர் மீதுள்ள விருப்பத்தை தெரிந்தும் தெரியாமலும் வெளிப்படுத்துவதே ஒரு அலாதியான உணர்வாகத்தான் இருக்கும். குறிப்பாக க்ரஷ் நிலையில் உள்ளவர்களிடம் டேட்டிங் செல்ல மறைமுகமாக அழைப்பதை அந்த நபர் புரிந்துக்கொண்டாலே போதும் லேசாக க்ரீன் சிக்னல் கிடைத்துவிடும்.
இப்படியெல்லாம் அவரவர்களுக்கே உரிய பாணியில் காதலையும், விருப்பத்தையும் தெரிவிப்பது ஒரு கலையாகவே இருக்கும். அந்த வகையில், தன் க்ரஷை நேரில் சந்திப்பதற்காக பெண் ஒருவர் மேற்கொண்ட மெனக்கெடல்தான் தற்போது ட்விட்டர்வாசிகளை திகைக்கச் செய்திருக்கிறது.
அதன்படி, உஜ்வால் அத்ரவ் என்ற பயனர் தனது ட்விட்டர் பக்கத்தில், “டிண்டரில் பெண் ஒருவர் இந்த ஸ்பாட்டிஃபை ப்ளேலிஸ்ட்டை அனுப்பியிருந்தார். இது ரொம்பவே க்யூட்டாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டு ஸ்க்ரீன்ஷாட்டையும் பகிர்ந்திருந்தார்.
அதில், நாளை கஃபே-ல் சந்திக்கலாமா என்பதை what about a date என்ற பெயரில், “I wanna See You , Tomorrow , At The Cafe" ஆகிய ஆல்பங்களை ஃப்ளேலிஸ்ட்டாக உருவாக்கி அதனை உஜ்வால் அத்ரவுக்கும் அனுப்பியிருக்கிறார் அந்த பெண்.
இந்த பதிவைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் மெனெக்கெட்டு தனித்துவமாக டேட்டிங்-க்கு அழைத்திருக்கிறார் என சிலாகித்தும் பாராட்டியும் வாழ்த்தியும் வருகிறார்கள். அதில், “எனக்கும் இதேப்போன்று ப்ரோப்போசல் வருவதற்கான தகுதி உள்ளது” , “டேட்டிங் கோல்ஸ்” , “எந்த கஃபே என முடிவெடுத்தாச்சா?” என்றெல்லாம் கமெண்ட் செய்திருக்கிறார்கள். உஜ்வாலின் இந்த பதிவு ஒரு லட்சத்துக்கும் மேலானோர் பார்வைக்கு சென்றிருக்கிறது.