கனிவாக டீ கேட்டால் அதற்கொரு விலை! கஸ்டமரின் அணுகுமுறையை மாற்ற டீ கடையின் நூதன ஐடியா!

கனிவாக டீ கேட்டால் அதற்கொரு விலை! கஸ்டமரின் அணுகுமுறையை மாற்ற டீ கடையின் நூதன ஐடியா!
கனிவாக டீ கேட்டால் அதற்கொரு விலை! கஸ்டமரின் அணுகுமுறையை மாற்ற டீ கடையின் நூதன ஐடியா!
Published on

பொது இடங்களில் கண்ணியமாக கனிவாக நடந்துக்கொள்வோர் மீது எப்போதும் ஒரு தனி மரியாதையே ஏற்படும். குறிப்பாக உணவகங்களில் அவ்வாறு நடந்துக்கொள்வதன் மூலம் அந்த நபர் மீது ஊழியர்களுக்கும் ஊழியர்கள் மீது வாடிக்கயாளருக்கும் ஒரு நல்ல மதிப்பு உண்டாகும்.

ஆனால், ஒரு சிலர் விரட்டும் தொணியில் பேசுவது சமயத்தில் முகம் சுழிப்பை ஏற்படுத்தும். இப்படியான சூழலை தவிர்க்க இங்கிலாந்தில் உள்ள Chai Stop என்ற உணவக உரிமையாளர் கொண்டு வந்த புதிய நடைமுறை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது, ஒரு டீ (desi chai) எனக் கேட்டால் 5 பவுண்ட், ஒரு டீ ப்ளீஸ் (desi chai please) எனக் கேட்போருக்கு 3 பவுண்ட், வணக்கம் ஒரு டீ ப்ளீஸ் (Hello, desi chai please) எனக் கேட்போரிடம் 1.90 பவுண்டும் கட்டணமாக வசூலிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டு வைக்கப்பட்டுள்ள பதாகைதான் காண்போரை கவர்ந்திருக்கிறது.

இங்கிலாந்தின் பிரஸ்டன் பகுதியில் கடந்த மார்ச் மாதம் 29 வயதான உஸ்மான் ஹுசைன் என்பவர் இந்த CHAI STOP உணவகத்தை தொடங்கியிருக்கிறார். இங்கு டீ மட்டுமல்லாமல் டோனட்ஸ், டெசெர்ட்ஸ் உள்ளிட்ட பல வகை உணவுகளும் விற்கப்படுகின்றன.

வாடிக்கையாளர்களின் எதிர்மறை எண்ணங்களை போக்குவதற்காக உஸ்மான் புதிதாக இந்த நடைமுறையை உருவாக்கியிருக்கிறார். அதாவது மேற்குறிப்பிட்டபடி ஒரு டீக்கு மூன்று விதமான விலையை நிர்ணயித்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசியுள்ள உஸ்மான் ஹுசைன், “மோசமான நடத்தை கொண்ட வாடிக்கையாளர்களை ஒரு போதும் சாய் ஸ்டாப் கொண்டிருக்கவில்லை. மக்களின் எதிர்மறை எண்ணங்களை வாசலிலேயே விட்டுவிட ஊக்குவிப்பதாகவே எங்களுடைய இந்த விதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

வாடிக்கையாளர்கள் தங்களது நல்ல பழக்கவழக்கங்களைப் பயன்படுத்துவது ஒரு நல்ல நினைவூட்டலாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் துரதிர்ஷ்டவசமாக சில நேரங்களில் எங்களுக்கும் அந்த நினைவூட்டல் தேவைப்படுகிறது.

இதுநாள் வரை முரட்டுத்தனமான வாடிக்கையாளர்களை நாங்கள் கொண்டிருக்கவில்லை. எங்களை பொறுத்தவரை எங்கள் உணவகத்துக்கு வருகிறவர்களை வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை போலவே நடத்த விரும்புகிறோம். அதே சமயத்தில் இதுகாறும் எவரிடமும் ஒரு டீக்கு 5 பவுண்ட் கட்டணம் வசூலித்ததில்லை. ஏனெனில் அனைவருமே கனிவாகவே நடந்துக்கொண்டதால் அதற்கான தேவை ஏற்பட்டதில்லை” என கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com