9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
Published on

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் இன்று அவை பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்காக தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்காக கடந்த 15ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்துள்ளது. முதல் 6 நாட்களில் 64,299 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், கடைசி நாளான நேற்று ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற உள்ளது. வரும் 25ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com