9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
Published on

தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. முதல்கட்ட தேர்தலில் 74.37 சதவீத வாக்குகளும், 2 ஆம் கட்டத் தேர்தலில், 78.47 சதவிகித வாக்குகளும் பதிவாகின. இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் 70.51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதையடுத்து தேர்தலில் பதிவான வாக்குப்பெட்டிகள் 74 மையங்களில் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை நடக்கும் வளாகத்தில் கம்பி வலைகள், மரத்தால் ஆன தடுப்புகளுடன் மேஜைகள் அமைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் இடங்களில் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை துவங்கிய உடன் முதலில் முகவர்கள் முன்னிலையில் வாக்குச் சீட்டின் நிற அடிப்படையில் வாக்குச் சீட்டுகளை பிரிக்கும் பணி துவங்கியுள்ளது. வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அடிப்படையில் தனித்தனியே 40 மேஜைகள் வரை போடப்பட்டு வாக்கு எண்ணிக்கை துவங்கியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com