கேட்பாரற்று சாலையில் கிடந்த பணப் பை... நேர்மையுடன் போலீசில் ஒப்படைத்த வியாபாரி

கேட்பாரற்று சாலையில் கிடந்த பணப் பை... நேர்மையுடன் போலீசில் ஒப்படைத்த வியாபாரி
கேட்பாரற்று சாலையில் கிடந்த பணப் பை... நேர்மையுடன் போலீசில் ஒப்படைத்த வியாபாரி
Published on

கோவில்பட்டியில் சாலையில் கிடந்த 7 ஆயிரம் ரூபாய் பணப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த வியாபாரியை போலீசார் பாராட்டினர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜமீன்பேட்டை தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். இவர், அப்பகுதியில் சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். ரெயில்வே நிலையம் செல்லும் மெயின்ரோட்டில் தனது இருசக்கர வாகனத்தில் பாலமுருகன் இன்று சென்று கொண்டு இருந்த போது, சத்தியபாமா திரையரங்கு எதிரேயுள்ள சாலையில் ஒருபை கீழே கிடந்துள்ளது. 

இதனை பார்த்த பாலமுருகன் அந்த பையை எடுத்து அருகில் இருந்தவர்களிடம் இது யாருடைய பை என்று கேட்டுள்ளார். அப்பகுதியில் இருந்தவர்கள் தங்கள் பை இல்லை என்று தெரிவித்ததும், அந்த பையை எடுத்துச் சென்று கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதற்கிடையில் கூசாலிப்பட்டியை சேர்ந்த முன்னாள் இராணு வீரர் சௌந்திரபாண்டியன் என்பவர் மார்க்கெட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய போது தனது பையை தவற விட்டதாக கூறி புகார் அளிக்க வந்துள்ளார். இதையெடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பாலமுருகன் கொண்டு வந்த கொடுத்த பை, சௌந்திரபாண்டியனுடையது என்பது தெரியவந்தது.


இதனைத் தொடர்ந்து போலீசார் பையை சௌந்திரபாண்டியனிடம் ஒப்படைத்தனர். பையில் ரூ 7 ஆயிரம், வங்கி கணக்கு புத்தகம், மருந்துகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. சாலையில் கிடந்த பையை எடுத்து வந்து காவல் நிலையத்தில் கொடுத்து, உரியவரிடம் ஒப்படைக்க காரணமாக இருந்த பாலமுருகனை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com