ரோந்து பணியில் சிக்கிய 600 லிட்டர் சாராயம்... ரோட்டில் கொட்டி அழித்த போலீஸ்

ரோந்து பணியில் சிக்கிய 600 லிட்டர் சாராயம்... ரோட்டில் கொட்டி அழித்த போலீஸ்
ரோந்து பணியில் சிக்கிய 600 லிட்டர் சாராயம்... ரோட்டில் கொட்டி அழித்த போலீஸ்
Published on

செஞ்சி அருகே 600 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர். சாரயம் காய்ச்சிய நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன் மற்றும் நல்லான்பிள்ளை பெற்றாள் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார், செஞ்சியை அடுத்துள்ள போத்துவாய் மலைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  


அப்போது அங்கு சாராயம் காய்ச்சுவதற்கு பேரல்களில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 600 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி அதே இடத்தில் கீழே கொட்டி அழித்தனர். மேலும் அங்கு இருந்த 30 லிட்டர் சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் போத்துவாய் கிராமத்தைச் சேர்ந்த சேட்டு என்பவர் மலைப்பகுதியில் சாராயத்தை காய்ச்சி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து சாராயம் காய்ச்சியதாக சேட்டு மீது நல்லான்பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com