“நாங்கள், கணவன் மனைவி இருவருமே வாய் பேச முடியாதவர்கள். எங்களுக்கு மளிகைப் பொருட்கள் தேவைப்படுகிறது” – மதுரமுத்து, செங்கல்பட்டு
“கணவருக்கு உடல்நிலை சரியில்லை, மனநலம் பாதிக்கப்பட்ட மகன் இருக்கிறார். உணவுப்பொருட்கள் தேவை” – தனலட்சுமி, காஞ்சிபுரம்
“என் தந்தை செருப்பு தைக்கும் தொழிலாளி. தாய் உயிருடன் இல்லை. கால் உடைந்த நிலையில் இருப்பதால், எனக்கும் வேலை இல்லை. வீட்டு வாடகை 5000 ரூபாய் கட்ட முடியவில்லை. பொருளுதவி கிடைத்தால், உபயோகமாக இருக்கும்” – கேசவராஜ், சென்னை
“நான் தெருக்கூத்து கலைஞர். என்னைப் போன்ற 350 பேருக்கு, எங்கள் பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படுகிரது” – வெங்கடேசன், செங்கல்பட்டு
“நான் மாற்றுத்திறனாளி. வீட்டில் இருவர் இருக்கிறோம். எங்களுக்கு மளிகைப் பொருட்கள் தேவை” – அன்பழகன், காஞ்சிபுரம்
“எங்கள் பகுதியில் 75 வயதான முதியவரொருவர், இடிந்த நிலையில் இருக்கும் குடிசையில் உள்ளார். அவரை மீட்டு காப்பகத்தில் சேர்க்க உதவி வேண்டும்” – மோனிஷா, சென்னை
- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகள் இவை. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால், 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.
உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'