300 ஆண்டு கால பழமையான கல்வெட்டு - மதுரையில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

300 ஆண்டு கால பழமையான கல்வெட்டு - மதுரையில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு
300 ஆண்டு கால பழமையான கல்வெட்டு - மதுரையில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு
Published on

மதுரை அருகே உள்ள கிண்ணிமங்களத்தில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் செக்கானுாரணி அருகே உள்ள கிண்ணிமங்ளலத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஏகநாதசாமி பள்ளிபடை சாமது மடம் உள்ளது. இம்மடத்திற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு, மதுரையை ஆண்ட நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த கடைசி அரசி மீனாட்சி நாயக்கர் வழங்கிய தன்ம சிலா சாதன பட்டயம் கல்வெட்டு கோயில் பராமரிப்பின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டால் ஆனா பட்டயம் 4 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்டுள்ளது. அதில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்களை ஆராய்ந்ததில் கல்வெட்டு 1722 ஆம் ஆண்டு ஆடி மாதம் 19 ம் நாள் வழங்கப்பட்டது தெரியவந்தது.

கல்வெட்டில் விஜயநகர பேரரசர்கள் தேவமாகராயா மல்லிகார் சுனராயர் , வெங்கடபதிராயர், திருமலை நாயக்கர், விஜயரங்க சொக்கநாதர் போன்ற பெயர்கள் வரிசையாக பொறிக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து இதுபோன்ற கல்வெட்டுகள் மேலும் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், அதனை கண்டெடுத்து பாதுகாக்க உரிய நடைவெடிக்கை மேற்கோள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com