துளிர்க்கும் நம்பிக்கை: உயிர்க்கொல்லி நோயால் பாதித்தவர் உள்ளிட்ட 3 பெண்கள் பயன்பெற்றனர்

துளிர்க்கும் நம்பிக்கை: உயிர்க்கொல்லி நோயால் பாதித்தவர் உள்ளிட்ட 3 பெண்கள் பயன்பெற்றனர்
துளிர்க்கும் நம்பிக்கை: உயிர்க்கொல்லி நோயால் பாதித்தவர் உள்ளிட்ட 3 பெண்கள் பயன்பெற்றனர்
Published on

திண்டுக்கல் மாவட்டத்தில் உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டவர் உள்ளிட்ட 3 பெண்களுக்கு, புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கையின் வாயிலாக அத்தியாவசியப் பொருள்கள் கிடைத்துள்ளன.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டு, கூலி வேலை செய்து ஜீவனம் நடத்தி வந்த பெண் ஒருவர், பொதுமுடக்கம் காரணமாக வருவாய் இழந்து தவித்து வந்தார். அவரது தங்கை, கணவரை இழந்த நிலையில் வருவாய் இழந்து வாழ்வாதாரத்துக்காக போராடி வந்தார்.

இந்நிலையில், புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை நிகழ்ச்சியை அறிந்த அவர்கள், உதவி கோரி தொடர்பு கொண்டனர். அவர்களுக்கு உதவிட வாழும் கலை அமைப்பினர் முன்வந்தனர். பழனி டி.எஸ்.பி சிவாவின் மூலம், தலா 10 கிலோ அரிசி, ஒரு மாதத்துக்கு தேவையான மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கறிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. அத்தியாவசியப் பொருள்கள் கிடைத்ததால் நெகிழ்ந்து போன மூவரும், உதவிகள் கிடைக்க உறுதுணையாக இருந்த புதிய தலைமுறைக்கு நன்றி கூறினர்.

> புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு நூற்றுக்கணக்கான அழைப்புகள் உதவி கோரி வந்துகொண்டிருக்கின்றன. எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள். கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள். உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com