சென்னையில் தேர்தல் பணியில் ஈடுபட இருக்கும் ஊழியர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் 16 சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் ஐந்தாயிரத்து 911 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. இந்த வாக்குச் சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ,கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் முறை உள்ளிட்ட பல்வேறு விதிகள் குறித்து பயிற்சியில் விளக்கம் அளிக்கப்பட்டது.
பயிற்சியில் ஈடுபடும் ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசி போடுவதற்கும் ஊழியர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கான இறுதி பயிற்சி அடுத்த வாரம் நடத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.