செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மட்டும் 182 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி தமிழகத்தில் 1,927 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 36,841 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 1,392 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,937 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தைக் காணலாம்.
செங்கல்பட்டு - 182, கோவை - 1, கடலூர் - 7, தருமபுரி - 4, திண்டுக்கல் - 3, ஈரோடு - 1, கள்ளக்குறிச்சி - 4, காஞ்சிபுரம் - 33, கன்னியாகுமரி - 10, கிருஷ்ணகிரி - 1, மதுரை - 10, நாகை - 4, நாமக்கல் - 4, புதுக்கோட்டை - 5, ராமநாதபுரம் - 8, ராணிப்பேட்டை - 25, சேலம் - 2, சிவகங்கை - 2, தஞ்சை - 2, தேனி - 9, திருவள்ளூர் - 105, திருவண்ணாமலை - 26, திருவாரூர் - 14, தூத்துக்குடி - 24, நெல்லை - 7, திருச்சி - 12, வேலூர் - 11, விழுப்புரம் - 7, விருதுநகர் - 5 எனப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து 19,333 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 17,179 பேர் சிகிச்சை உள்ளனர். மேலும் 326 பேர் பலியாகியுள்ளனர்.