தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல் தெரிவித்துள்ளார்.
இன்று தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு இந்த வாக்குப்பதிவு தொடங்கியது. கடந்த மூன்று மணி நேரமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ 9 மணி நிலவரப்படி எவ்வளவு சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறித்து தகவல் வெளியிட்டுள்ளார். அதாவது “தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 10.01 சதவிகித வாக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 11.20 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன. ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் 1.23 சதவிகிதம் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. வடசென்னையை பொறுத்தவரை 4.58 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
தென்சென்னையை பொறுத்தவரை 5.67 வாக்குகள் பதிவாகியுள்ளன. மத்திய சென்னையில் 3.71 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 4.41 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடந்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.