எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க கோரி வழக்கு ! இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க கோரி வழக்கு ! இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க கோரி வழக்கு ! இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை
Published on

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கக் கோரி திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. 

அதிமுக பிளவுபட்டிருந்த போது முதலமைச்சராக பதவியேற்ற எடப்பாடி கே.பழனிசாமி, தனது அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டுவந்தார். அதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். ஆகையால், அவர்கள் 11 பேரையும் தகுதி நீக்கக் கோரி திமுக கொறடா சக்கரபாணி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதேவேளையில், அரசுக்கு எதிராக வாக்களித்ததாக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கக் கோரி டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் வழக்கு தொடர்ந்திருந்தனர். 

அவற்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மனுக்களைத் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து திமுக கொறடா சக்கரபாணியும், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இருதரப்பினரும் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வரவுள்ளன.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com