விஷம் வைத்து கொல்லப்பட்ட நூற்றாண்டு புளியமரம் அகற்றம் : மக்கள் கவலை

விஷம் வைத்து கொல்லப்பட்ட நூற்றாண்டு புளியமரம் அகற்றம் : மக்கள் கவலை
விஷம் வைத்து கொல்லப்பட்ட நூற்றாண்டு புளியமரம் அகற்றம் : மக்கள் கவலை
Published on

மதுரையில் நூறு ஆண்டுகளை கடந்த புளியமரம் சமூக விரோதிகளால் விஷம் வைத்து கொல்லப்பட்ட நிலையில், அம்மரம் இன்று அகற்றப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலையாண்டி தியேட்டர் அருகில் இருந்த நூறு ஆண்டு பழமையான புளியமரத்திற்கு மர்ம நபர்கள் விஷம் வைத்து கொன்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த மரத்தை அகற்றிவிட்டு புதிய மரம் நட வேண்டும் என உசிலம்பட்டி கோட்டாச்சியர் ராஜ்குமாரிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் இன்று கோட்டாச்சியர் உத்தரவின்படி, விஷம் வைத்து கொலை செய்யப்பட்ட புளியமரத்தை வெட்டி அகற்றினர். 100 வருடங்களுக்கு மேல் பழமையான மரம் அகற்றப்படுவதை கண்ட மக்கள் கவலை அடைந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com