“நேருவின் புகைப்படம் எங்கே” - கோபப்பட்ட வாஜ்பாய்

“நேருவின் புகைப்படம் எங்கே” - கோபப்பட்ட வாஜ்பாய்
“நேருவின் புகைப்படம் எங்கே” - கோபப்பட்ட வாஜ்பாய்
Published on

1977 -ம் வருடம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் , வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருந்தார். அப்போழுது மொரார்ஜி தேசாய் இந்திய பிரதமராக இருந்தார். பதவியேற்ற பின்  சவுத் பிளாக்கில் இருக்க கூடிய தனது அலுவலகத்துக்கு சென்றார் வாய்பாய். அறைக்கு உள் நுழைந்து பொறுபேற்றுக் கொண்ட அவர் , திடீரென வெளியே வந்தார். அங்கிருந்த ஊழியர்களை அழைத்தார். ஊழியர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏனெனில் அமைச்சர்கள் வெளியே வந்தெல்லாம் , ஊழியர்களை அழைக்கும் வழக்கமில்லை. அலுவலகத்தின் உள்ளிருந்தே அழைப்பார்கள்.

”நான் சிலமுறை இங்கே வந்திருக்கிறேன், பலரது புகைப்படங்கள் இருக்கும் இந்த இடத்தில் நேருவின் புகைப்படமும் இருப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் அது இப்போது இல்லை. முன்னாள் பிரதமர் நேருவின் புகைப்படம் இங்கிருந்ததே எங்கே” என்றார் கோபமாக. ஆட்சி மாறியதால் அதனை அகற்றி விட்டோம் என்றனர். கோபம் வெளிப்பட்டவராய் ”இன்னும் சில நிமிடங்களில் அந்த புகைப்படம் இங்கே முன்னர் இருந்த அதே இடத்தில் இருக்க வேண்டும் , நான் திரும்பி வரும்போது அதனை பார்க்க வேண்டும்” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். ஊழியர்களும் உடனடியாக அந்த புகைப்படத்தை எடுத்து வந்து அங்கே வைத்தனர். 

வாஜ்பாய் மற்றும் நேரு இடையேயான உறவு மிகவும் ஆரோக்கியமான ஒன்றாக இருந்திருக்கிறது. வாய்பாயின் உரைகளை கேட்ட நேரு , கண்டிப்பாக வாஜ்பாய் பிரதமர் ஆவார் என அனைவரிடமும் கூறினார். அதுவும் 3 முறை இந்தியாவின் பிரதமரானார் வாய்பாய் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் வாய்பாயும் நேருவும் நாடாளுமன்றத்தில் எலியும் பூனையுமாக செயல்பட்டவர்கள். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com