“அரசியலை விட்டு எப்போது விலகுவீர்கள்” - சித்துவை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

“அரசியலை விட்டு எப்போது விலகுவீர்கள்” - சித்துவை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்
“அரசியலை விட்டு எப்போது விலகுவீர்கள்” - சித்துவை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்
Published on


ராகுலின் தோல்வியால் காங்கிரசின் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு சமூக வலைத்தளங்களில் பிரச்னை எழுந்துள்ளது.

பெரிய எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இந்திய மக்களவைத் தேர்தல் இறுதி நிலையை அடைந்துள்ளது. மத்தியில் பாஜக அரசு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. இந்தத் தேர்தலில் அதிகம் கவனம் பெற்ற தொகுதியாக அமேதி தொகுதி அமைந்தது. காங்கிரஸ் கட்சியின் கோட்டை எனக் கூறப்பட்ட நிலையில் அமேதி தொகுதியில் ராகுல்காந்தியை வீழ்த்தினார் பாஜகவின் ஸ்மிரிதி ராணி. 

இது குறித்து பேசிய ராகுல்காந்தியும் தன்னை தோற்கடித்த ஸ்மிரிதி ராணிக்கு வாழ்த்துகள் எனத் தெரிவித்தார். இந்நிலையில் ராகுலின் தோல்வியால் காங்கிரசின் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு சமூக வலைத்தளங்களில் பிரச்னை எழுந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் செய்தியாளர் சந்திப்பின்போது ராகுல்காந்தியின் அமேதி தொகுதி குறித்த கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினார்கள். அதற்கு அதீத நம்பிக்கையுடன் பதிலளித்த சித்து, ''அமேதியில் ராகுல் தோல்வியடைந்தால் நான் அரசியலைவிட்டு போய்விடுவேன்'' என்று தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கையில் ராகுலின் தோல்வி உறுதியானவுடனேயே சமூக வலைத்தளவாசிகள், சித்துவின் ட்விட்டர் பக்கத்தில் போய் கேள்விகளால் துளைக்கத்தொடங்கினர். 

‘எப்போது அரசியலை விட்டு போகப்போகிறீர்கள்?' என்றும் 'அவர் வாக்கு தவறமாட்டார். விரைவில் அரசியலைவிட்டு போய்விடுவார்'என்று கிண்டல் அடித்து வருகின்றனர். இன்னும் சிலர் ராகுல்காந்தியை டேக் செய்து சித்துவை எப்போது கட்சியை விட்டு நீக்க போகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com