இனி Truecaller-ல் கால் ரெக்கார்டிங் செய்யலாம்! அறிமுகமாகும் புதிய அப்டேட்!

ட்ரூகாலர் செயலியானது தற்போது ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்களுக்கும் கால் ரெக்கார்டிங் அணுகலை வழங்க முடிவுசெய்துள்ளது.
Call Recording - Truecaller
Call Recording - TruecallerTwitter
Published on

Truecaller செயலியானது தற்போது அனைத்து மொபைல் பயன்பாட்டாளர்களும் அதிகமாக பயன்படுத்தும் ஒரு அப்ளிகேசனாக இருந்துவருகிறது. சில பயன்பட்டாளர்கள் டீஃபால்ட் டயலராகவே Truecaller-ஐ பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தங்களுடைய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தொடர்ந்து பல அம்சங்களை அறிமுகப்படுத்திவருகிறது, ட்ரூகாலர்.

அந்த வகையில் இந்திய அரசின் அறிவுறுத்தலின்படி மோசடி அழைப்புகள் மற்றும் மெசேஜ்களை பில்டர் செய்யும் அம்சம், மெசெஞ்சர் ஐடி முதலிய பல அம்சங்களை தொடர்ந்து செய்துவருகிறது ட்ரூகாலர். இத்துடன் கால் ரெக்கார்டிங் அம்சத்தை விரைவில் மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

ஆண்ட்ராய்ட் பயனர்களே விரைவில் காத்திருங்கள்!

கால் ரெக்கார்டிங் அம்சமானது ட்ரூகாலரில் புதிதாக அறிமுகப்படுத்தப்படவில்லை. இது தொடக்க காலத்தில் ஏற்கனவே இந்த செயலியால் வழங்கப்பட்ட ஒரு அம்சமாகும். ஆனால் அப்போது கால் ரெக்கார்டிங் அம்சமானது API பியூச்சரைப் பயன்படுத்தி செயல்பட்டதால் கூகுள் அதை முறியடித்தது. அதன் பிறகு அந்த அம்சத்தை வழங்குவதை ட்ரூகாலர் நிறுத்தியது. தற்போது AI மூலம் செயல்படும் வகையில் புதிய கால் ரெக்கார்டிங் அம்சத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ட்ரூகாலர். இது முதலில் அமெரிக்காவில் இருக்கும் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், விரைவில் ஆண்ட்ராய்ட் பயன்பாட்டாளர்களுக்கும் வழங்கப்படும் என்று ட்ரூகாலர் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ட்ரூகாலர் பதிவிட்டிருக்கும் பதிவில், “அமெரிக்காவில் உள்ள ஐபோன் பயன்பாட்டாளர்களே, புதிய அப்டேட் விருந்துக்கு தயாராகுங்கள். எங்களின் சமீபத்திய அப்டேட் மூலம் உங்கள் ரெக்கார்டிங் சூப்பர் ஹீரோவை பயன்படுத்துங்கள். ஆண்ட்ராய்டு பயனர்களே காத்திருங்கள். உங்கள் சாதனங்களுக்கும் அழைப்பு பதிவு விரைவில் வருகிறது. மேலும் பல நாடுகளுக்கும் இது கொண்டு சேர்க்கவிருக்கிறது” என்றும் பதிவிட்டுள்ளது.

“கால் ரெக்கார்டிங் லைன்” மூலம் ரெக்கார்டு செய்யலாம்! எப்படி செய்வது?

கால் ரெக்கார்டிங் அம்சமானது, ஒரு நபருக்கு கால் செய்யும் போது ‘Call the Recording Line’-ஐ கிளிக் செய்யவேண்டும். அதனை தொடர்ந்து ‘Add Call’ கொடுத்து எந்த நம்பருக்கு கால் செய்கிறோமோ, அதை டயல் செய்து, பின்னர் மெர்ஜ் கொடுக்க வேண்டும். தற்போது உங்களுடைய போன் கால், ரெக்கார்டு செய்யப்படும். பின்னர் அழைப்பு முடிந்ததும், உங்களுடைய ரெக்கார்டு தயாராக உள்ளதாக நோடிபிகேசனில் அறிவிப்பு வரும்.

Call Recording - Truecaller
Call Recording - TruecallerTruecaller

ரெக்கார்டிங் செய்வதை தொடர்ந்து அதனை ட்ரூகாலரிலேயே பெயர் மாற்றம், எடிட், ஷேரிங் அனைத்தையும் உங்களால் செய்துகொள்ளக்கூடிய வகையில் இந்த அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. முதலில் இந்த பியூச்சரானது பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கு முதலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் இந்தியாவில் உள்ள ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் இந்த பியூச்சர் வழங்கப்படும் என்று ட்ரூகாலர் செய்தித் தொடர்பாளர் கேஜெட்ஸ் 360 இடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com