14 நாள் நீடிக்கும் பேட்டரி! அறிமுகமானது MI SMART BAND 7 - டாப் 7 சிறப்பம்சங்கள்!

14 நாள் நீடிக்கும் பேட்டரி! அறிமுகமானது MI SMART BAND 7 - டாப் 7 சிறப்பம்சங்கள்!
14 நாள் நீடிக்கும் பேட்டரி! அறிமுகமானது MI SMART BAND 7 - டாப் 7 சிறப்பம்சங்கள்!
Published on

14 நாள் நீடிக்கும் பேட்டரி, 1.62 இன்ச் டிஸ்ப்ளே உள்ளிட்ட பல சிறப்பம்சங்களுடன் அறிமுகமாகி உள்ளது Xiaomi Smart Band 7.

ஜியோமி நிறுவனம் தனது பேண்ட் சீரீஸின் அடுத்த ஃபிட்னெஸ் பேண்டை அறிமுகப்படுத்தி உள்ளது. “Xiaomi Smart Band 7” என்ற பெயரில் இந்த பேண்ட் வெளியாகி உள்ளது. முந்தைய வெர்ஷனான Xiaomi Smart Band 6 உடன் ஒப்பிடுகையில் ஒரே மாதிரியான வடிவமைப்பை கொண்டிருந்தாலும், சில புது அம்சங்களையும் சேர்த்துள்ளதான ஜியோமி நிறுவனம் தெரிவிக்கிறது.

அறிமுகமாகியுள்ள ஜியோமி ஸ்மார்ட் பேண்ட் 7 -இன் டாப் 7 சிறப்பம்சங்கள் இதோ!

1. ஜியோமி ஸ்மார்ட் பேண்ட் 7 ஆனது 1.62 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் வெளியாகி உள்ளது. முந்தைய மாடலான ஸ்மார்ட் பேண்ட் 6 உடன் ஒப்பிடுகையில் 25% அதிகமான டிஸ்ப்ளேவை வழங்கியுள்ளதாக ஜியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.

2. இந்த பேண்ட் 7 ஆனது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஐபோன்கள் இரண்டிலும் சிறப்பாக வேலை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனர்கள் இணைப்புக்காக புளூடூத் 5.2 ஐப் பயன்படுத்தலாம்.

3. ஜியோமி ஸ்மார்ட் பேண்ட் 7 மூலம் உடற்பயிற்சியின் போது பயன்படுத்தக்கூடிய ஆக்ஸிஜனின் அதிகபட்ச அளவை அளவிடுகிறது. தூக்க கண்காணிப்பு மற்றும் SpO2 மற்றும் இதய துடிப்பு கண்காணிப்பையும் சிறப்பாக மேற்கொள்ள இந்த பேண்ட் உதவுமாம்.

4. இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கு எதிரான பாதுகாப்பிற்காக 5ATM கட்டமைப்பை பெற்றுள்ளது. ஓட்டம், நடைபயிற்சி, டிரெட்மில், ரோயிங் மெஷின் மற்றும் எலிப்டிகல் போன்ற ஐந்து உடற்பயிற்சிகளை கண்காணிக்கும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.

5. இதன் பேட்டரி 14 நாட்கள் வரை நீடிக்கும் என ஜியோமி தெரிவித்துள்ளது. Mi Fitness செயலி மூலம் பயனர்கள் இந்த பேண்டை நிர்வகிக்கலாம் மற்றும் உடற்பயிற்சி அளவீடுகளைச் சரிபார்க்கலாம்.

6. உலகளாவிய சந்தைகளில் இந்த பேண்டின் விலை 49.9 யூரோ ஆகும். இந்திய மதிப்பில் ரூ. 4,100 ஆகும். இதன் முந்தையப் வெர்ஷனான பேண்ட் 6 இந்தியாவில் ரூ. 3,500-க்கு விற்கப்படுகிறது.

7. ஆரஞ்சு, கருப்பு, நியான் பச்சை மற்றும் நீலம் ஆகிய நான்கு வண்ணங்களில் இந்த பேண்ட் வெளியாகி உள்ளது. இந்தியாவில் எப்போது இந்த பேண்ட் விற்பனைக்கு வரும் என்பது குறித்து ஜியோமி எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. ஜியோமி 12 சீரிஸ் - உடன் ஜியோமி ஸ்மார்ட் பேண்ட் 7-உம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com