அட இதுக்கெல்லாம் தினமா என்று யோசிக்காதீர்கள்… பாஸ்வேர்டு பாதுகாப்பு மற்றும் பாஸ்வேர்ட்டை எவ்வாறு கையாள வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காக மே மாதம் முதல் வியாழன் பாஸ்வேர்டு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
தங்கத்தை பூட்டி வைத்து பாதுகாப்பது போல இந்த பாஸ்வேர்டுகளையும் பாதுகாக்க வேண்டிய கட்டயாம் உள்ளது.
சில நேரங்களில் தெரிந்தோ தெரியாமலோ நாம் சில தவறுகளை செய்கிறோம். அதில் ஒரே பாஸ்வேர்டுகளை எல்லாவற்றிருக்கும் பயன்படுத்துவது, தங்கள் பெயரோ அல்லது தங்களுக்குப் பிடித்தமானவர்களின் பெயரோ வைத்து கொள்வது, வரிசையாக எண்களை வைத்துக்கொள்வது, நண்பர்களிடம் பாஸ்வேர்டுகளை பகிர்ந்து கொள்வது போன்றவைகளை சொல்லலாம்.
சிலர் கடினமாக பாஸ்வேர்டு வைத்துவிட்டு பிறகு அதை மறந்துவிட்டு அல்லாடுவதும் உண்டு. அதே போல அதிக அளவிலான பாஸ்வேர்டுகளை வைத்துவிட்டு ஒன்றுக்கொன்று மாற்றி போடுவதும் உண்டு. எனவே நீங்கள் பயன்படுத்தும் பாஸ்வேர்ட் உங்களுக்கு எளிதாகவும் மற்றவர்களுக்கு கடினமாகவும் இருக்க வேண்டும்.
பெரும்பாலும் வீட்டில் உள்ள உறுப்பினர்களிடம் கூட பகிராமல் இருப்பது நல்லது.. இல்லயெனில் நம் பாஸ்வேர்டு விஷயத்தில் அவர்களும் கவனமாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அது போல அலுவலகங்ளில் உள்ள கம்யூட்டர்களில் பேஸ்புக், இமெயில்கள் திறந்தால் அதை அப்படியே விட்டுவிடுவது கூட சிலரின் வழக்கமாக இருக்கும்.
எனவே அதிலும் நாம் கவனம் கொள்ள வேண்டும். அது போல பொது இடங்களில் வை-பை வசதி கிடைத்தால் அதை பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் வல்லுநர்கள். வங்கியிலிருந்து தொலைபேசியில் யார் எதற்காக பாஸ்வேர்டுகளை கேட்டாலும் எக்காரணம் கொண்டும் அதை தெரிவித்து விடக் கூடாது.
மேலும் புதிதாக ஒரு அக்கவுண்டலிருந்து இமேயில் வந்தால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குறிப்பாக அதில் ஏதேனும் link இருந்து அதை நீங்கள் click செய்யும் போது மீண்டும் log in செய்ய சொல்லிக் கேட்டால் அதை தவிர்த்துவிடுங்கள். அது போல எல்லா சைட்டிலும் சென்று சட்டென ஆன்லைன் ரீசார்ஜ் செய்வதோ… புதிய ஆன்லைன் சைட்டில் பொருள் வாங்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். எல்லாவற்றிருக்கும் மேலாக பாஸ்வேர்டுகளை அவ்வப்போது மாற்றி வைத்துக் கொள்வது நல்லது. Passphrase , password manager எனப் பயனாளர்களுக்காக எத்னையோ ஐடியாக்கைளை வல்லுநர்களும் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார்கள். பொதுவாக எனக்கு எல்லாம் தெரியும் என்ற அலட்சியத்தால் வரும் கவனக்குறைவே இணைய திருட்டிற்கு வழி வகை செய்கிறது. ஆகவே பாஸ்வேர்டு பத்திரம் பாஸ்!