“வெகேஷன் மோட்” என்ற புதிய அப்டேட்டை வாட்ஸ்அப் செயலி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது
ஃபேஸ்புக் நிறுவனத்தின் மெசெஜ் செயலியான வாட்ஸ்அப் அவ்வப்போது புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. தங்கள் பயன்பாட்டாளர்களின் கருத்துகளை தொடர்ந்து கேட்டு வரும், அவர்கள் கேட்கும் புதிய அப்டேட்களையும் உருவாக்கி தருகிறது.
அந்த வகையில் ‘வெகேஷன் மோட்’ என்ற புதிய அப்டேட்டை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த அப்டேட் தற்போது பீட்டா பயன்பாட்டாளர்களின் சோதனையில் உள்ளது. இதைத்தொடர்ந்து அனைத்து ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
இந்த அப்டேட் மூலம் அர்சிவ் செய்யப்பட்ட சாட்களையும் மியூட் செய்துகொள்ள முடியும். இதற்கு முன்னர் வாட்ஸ்அப்பில் இந்த ஆப்ஷன் இல்லாமல் இருந்தது. ஆனால் கடந்த வருடன் இந்த ஆப்ஷன் கொண்டுவரவுள்ளதாக அறிவித்த வாட்ஸ்அப் நிறுவனம், ஏதோ காரணங்களால் அதை கிடப்பில் போட்டது. இந்நிலையில் மீண்டும் ‘வெகேஷன் மோட்’ ஆப்ஷனை டெவெலப் செய்துள்ளது. இது விரைவில் பயன்பாட்டுக்கும் வரவுள்ளது.