'ஜுன் 30 முதல் வாட்ஸ்-அப் செயல்படாது'

'ஜுன் 30 முதல் வாட்ஸ்-அப் செயல்படாது'
'ஜுன் 30 முதல் வாட்ஸ்-அப் செயல்படாது'
Published on

வரும் ஜுன் 30ம் தேதி முதல் குறிப்பிட்ட மொபைல் போன்களில் வாட்ஸ்-அப் செயல்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன. 
பிளாக்பெர்ரி 10, பிளாக்பெர்ரி ஓ.எஸ்., நோக்கியா S40, நோக்கியா S60, உள்ளிட்ட மொபைல்கள் பழைய பிளார்ட்ஃபார்ம்களை கொண்டுள்ளதால், இதில் வாட்ஸ்-அப் செயல்படாது என அறிவிக்கபட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டே இந்த வகை ஃபோன்களில் வாட்ஸ்-அப் செயலி செயல்படாது என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பால் பிளாக்பெர்ரி நிறுவனத்திற்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் என கூறியதால்,  ஜுன் 2017 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. பழைய ஓ.எஸ்களை கொண்ட மொபைல் ஃபோன்கள், எதிர்காலத்தில் தங்கள் பயன்பாட்டின் அம்சங்களை விரிவாக்குவதற்கு தேவையான திறன்களை வழங்காது என்பதால், வாட்ஸ்- அப் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்-அப் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். குறுந்தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் என பல்வேறு செய்திகளை வாட்ஸ்-அப் மூலம் எளிய முறையில் வாடிக்கையாளர்கள் பகரிந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த வாட்ஸ்-அப் செயலி வரும் ஜுன் 30ம் தேதி முதல் சில மொபைல் ஃபோன்களில் மட்டும் செயல்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com