கம்ப்யூட்டர் போதும்: செல்போன் வேண்டாம் - வாட்ஸ் அப்பின் புதிய முயற்சி

கம்ப்யூட்டர் போதும்: செல்போன் வேண்டாம் - வாட்ஸ் அப்பின் புதிய முயற்சி
கம்ப்யூட்டர் போதும்: செல்போன் வேண்டாம் - வாட்ஸ் அப்பின் புதிய முயற்சி
Published on

இண்டர்நெட் வசதி செல்போனில் இணைக்கப்படாமலேயே கணினியில் வாட்ஸ் அப் பயன்படுத்தும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என வாட்ஸ் அப் நிர்வாகம் தெரிவித்துள்ளது

உலகளவில் தற்போது அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று வாட்ஸ்அப். ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப், பயனாளர்களுக்கு வசதியாகவும், பாதுகாப்பு அம்சங்களுக்காகவும் அவ்வப்போது அப்டேட்டுகளை விடுத்து வருகிறது. வாட்ஸ் அப் டெஸ்க்டாப் வெர்ஷனும் புகழ்பெற்ற ஒன்று. 

அலுவலக பயன்பாட்டுக்கு எளிதாக டெஸ்க்டாப் வெர்ஷன் பயன்படுகிறது. வாட்ஸ் அப் செயலியின் கியூஆர் கோட் மூலம் கணினியில் இணைத்து வாட்ஸ் அப்பை பயன்படுத்தலாம். இந்நிலையில் இண்டர்நெட் வசதி செல்போனில் இணைக்கப்படாமலேயே கணினியில் வாட்ஸ் அப் பயன்படுத்தும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என வாட்ஸ் அப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள வாட்ஸ் அப், எங்களது நிர்வாகம் Universal Windows Platform  செயலியை new multi-platform சிஸ்டம் உடன் இணைத்து பணியாற்றவுள்ளோம். இதன் மூலம் உங்கள் செல்போன் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும் வாட்ஸ் அப்பை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. எப்போது இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என வாட்ஸ் அப் நிர்வாகம் தெரிவிக்கவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com