ஒரே நேரத்தில் இரண்டு ‘வீடியோ காலிங்’ : வாட்ஸ் அப் புதிய அப்டேட்

ஒரே நேரத்தில் இரண்டு ‘வீடியோ காலிங்’ : வாட்ஸ் அப் புதிய அப்டேட்
ஒரே நேரத்தில் இரண்டு ‘வீடியோ காலிங்’ : வாட்ஸ் அப் புதிய அப்டேட்
Published on

ஃபேஸ்புக் மெசெஞ்சர் அப் மூலம் வாட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு வீடியோ கால் பேசும் ஆப்ஷன் வரவுள்ளது.

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர், பல்வேறு நிறுவனங்களும் வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. அத்துடன் வீட்டிற்குள்ளே மக்கள் முடங்கியுள்ளதால், உறவினர்கள் மற்றும் நண்பர்களை காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நிறுவன ஊழியர்கள் மற்றும் மக்கள் முகம் பார்த்துப் பேசிக்கொள்ளும் வீடியோ காலிங் ஆப்ஷனை அதிகம் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். இதற்காக பல்வேறு செயலிகளும் பயன்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் தங்கள் வீடியோ கால் பேசும் வசதியை மேம்படுத்தியது. குரூப் கால் வசதி, அதன் மூலமே 8 பேர் வரை பேசும் வசதி உள்ளிட்டவற்றைக் கொண்டு வந்தது. இந்நிலையில் கூடுதலாக குரூப் வீடியோ கால் தவிர்த்து, ஒரே நேரத்தில் இரண்டு வீடியோ காலிங் பேசும் வசதி வாட்ஸ் அப்பில் வரவுள்ளது. இது நேரடியாக வாட்ஸ் அப்பில் மேம்படுத்தப்படாமல், பேஸ்புக்கின் மெசெஞ்சர் அப்-லிருந்து ஷார்கர்ட் மூலம் வாட்ஸ் அப்பிற்கு பகிரப்படும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஃபேஸ்புக் நிறுவனம் தங்கள் மெசெஞ்சர் அப்-ல் ‘ரூம்’ என்ற ஆஃப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்டோர் குரூப் வீடியோ காலில் பேச முடியும். இதிலிருந்து வாட்ஸ் அப்பிற்கு ஷார்ட் கட் அனுப்பி, அதிலிருந்து ஒரே நேரத்தில் இரண்டு வீடியோ காலிங் பேச முடியும். அத்துடன் வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் செயலி வைத்திராத ஒருவர் கூட இந்த ஷார்ட் கட்டை வைத்து வீடியோ கால் பேச முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் வாட்ஸ் அப்பில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com