வாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட், மொபைல் போனின் பேட்டரியை அதிகமாக பயன்படுத்துவதாக வாடிக்கையாளர்கள் சிலர் புகார் தெரிவித்துள்ளனர்.
பிரபல சமூகவலைதள செயலியான வாட்ஸ் ஆப் அவ்வப்போது தனது செயலியின் அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது ஆண்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைகளுக்கான புதிய அப்டேட்டை வாட்ஸ் ஆப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய அப்டேட் வந்தப் பிறகு, இது மொபைல் போனின் பேட்டரி சார்ஜை அதிகமாக எடுத்துக்கொள்வதாக வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதில் வாட்ஸ் அப் செயலி குறைந்தது 5 மணி நேரத்திலிருந்து 11 மணி நேரம் வரை பேட்டரியின் சார்ஜை பயன்படுத்தி வருவதாக சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனை ஒன்பிளஸ், சாம்சங், ஸியோமி உள்ளிட்ட அனைத்து மொபைல் போன் வாடிக்கையாளர்களும் இந்தக் குற்றசாட்டை முன்வைத்து வருகின்றனர். அதேபோல ஐபோன் வாடிக்கையாளர்கள் சிலரும் இந்தக் குற்றச்சாட்டை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.