வாட்ஸ்அப்பிலும் ‘வெரிஃபைடு’ குறியீடு

வாட்ஸ்அப்பிலும் ‘வெரிஃபைடு’ குறியீடு
வாட்ஸ்அப்பிலும் ‘வெரிஃபைடு’ குறியீடு
Published on

ஃபேஸ்புக், டுவிட்டரைப் போன்று வாட்ஸ்அப்பிலும் ‘வெரிஃபைடு’ குறியீடு வரவுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ பக்கத்தை அறிந்து கொள்ள பெயரின் பக்கத்தில் நீல நிறத்தில் வெரிஃபைடு குறியீடு இருக்கும். இதன் மூலம் போலி கணக்குகளை தெறிந்து கொள்ளலாம். முக்கியமாக பிரபலங்களின் பெயர்களைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் செயல்படும் போலி கணக்குகளை அறிந்து கொள்ள இது உதவுகிறது. மேலும் வெரிஃபைடு குறியீடு மூலம் போலி கணக்குகளில் இருந்து பல தவறான தகவல்கள் பரப்பப்படுவதும் தவிர்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, பிரபலங்களில் அதிகாரப்பூர்வ பக்கத்தை எளிதாக அறிந்து கொள்ள முடியும். 

இதேப்போன்று வாட்ஸ்அப்பிலும் பச்சை நிறத்தில் வெரிஃபைடு வசதி விரைவில் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் மொபைல் நம்பர்களின் நம்பகதன்மைக்காக இந்த வசதி கொண்டுவரவுள்ளதாக வாட்ஸ அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. வெரிஃபைடு குறியீடுக்கு கீழே நிறுவனம் அல்லது நபர்களின் அதிகாரப்பூர்வ முகவரி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com