இந்திய தொழில்நுட்பத்துறையின் விதிகளை மீறி வாட்ஸ்அப் நிறுவனம் செயல்படுவதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
அப்போது, “வாட்ஸ்அப் நிறுவனம் கையாளும் தனியுரிமை பாதுகாப்பு அம்சமான என்ட் டூ என்ட் என்ஸ்கிரிப்ட்-ஐ நீக்க வேண்டும். இது ஒரு செய்தி எவ்வாறு பரவுகிறது என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுத்துகிறது” என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு பதிலளித்த வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “பாதுகாப்பு முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என இந்திய அரசு நிர்ணயித்தால், இந்தியாவை விட்டு வாட்ஸ்அப் வெளியேறதான் வேண்டும். அவ்வாறு வெளியேறினால் 40 கோடி வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவர்” என்று அவர் குறிப்பிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.