பயனாளர்களுக்கு வசதியாகவும், பாதுகாப்பு அம்சங்களுக்காகவும் வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது அப்டேட்டுகளை விடுத்து வருகிறது. இந்நிலையில் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள க்யூக் மீடியா எடிட் ஷார்ட்கட் (Quick Media Edit shortcut) என்ற வசதியின் மூலம் பயனாளர்கள் வாட்ஸ் அப்பிலேயே போட்டோக்களை எடிட் செய்ய முடியும். தற்போது வாட்ஸ் அப் மூலம் ஒரு புகைப்படத்தை நண்பர்களுக்கு அனுப்பும்போது அதனை ஃபில்டர் செய்து அனுப்பக்கூடிய வசதி உள்ளது.
வேறு ஒருவர் அனுப்பும் புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் இருந்துகொண்டே அதனை எடிட் செய்து மற்றவர்களுக்கு ஃபார்வேர்ட் செய்யும் ஆப்ஷனை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதாவது ஒரு போட்டோ நம் வாட்ஸ் அப்பிற்கு வந்தால் அதனை அப்படியே ஃபார்வேர்ட் செய்ய முடியுமே தவிர கிராப், கலர் மாற்றுதல் போன்ற எடிட்களை செய்ய முடியாது. வர இருக்கும் இந்த அப்டேட் மூலம் வேறு ஒருவர் அனுப்பும் புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் இருந்துகொண்டே கிராப் செய்தல், கலர் மாற்றுதல், பெயிண்ட் மற்றும் போட்டோவில் எழுத்துக்களை பதிவிடல் போன்ற எடிட்களை செய்து ஃபார்வேர்ட் செய்ய முடியும்.
வழக்கமாக போட்டோவுக்கு வலதுபுறத்தின் மேலே இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்தால் எடிட் (Edit) என்ற ஆப்ஷன் இருக்கும். அதன் மூலம் இந்த எடிட் செய்யலாம்.
தற்போது சோதனையில் உள்ள இந்த வசதி, விரைவில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது