இருப்பிடத்தை அறிய வாட்ஸ்-அப்பில் புதிய தொழில்நுட்பம்

இருப்பிடத்தை அறிய வாட்ஸ்-அப்பில் புதிய தொழில்நுட்பம்
இருப்பிடத்தை அறிய வாட்ஸ்-அப்பில் புதிய தொழில்நுட்பம்
Published on

பயனாளர்களுக்கு தீபாவளி பரிசாக, இருப்பிடத்தை நேரடியாக பகிர்ந்துகொள்ளும் புதிய தொழில்நுட்பத்தை வாட்ஸ்-அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட் ஃபோன் வைத்துள்ளவர்களில் பெரும்பாலானோர் வாட்ஸ்-அப் செயலி பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களை கவரும் வண்ணம், புதுப்புது தொழில்நுட்பங்களை வாட்ஸ்-அப் செயலியின் நிறுவனம் வெளியிட்ட வண்ணம் உள்ளது. இந்நிலையில் ‘லைவ் லொகேஷன்’ என்ற புதிய தொழில்நுட்பம் ஒன்றை வாட்ஸ்-அப் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலின் மூலம் வாட்ஸ்-அப் செயலி பயன்பாட்டாளர்கள், தங்களின் இருப்பிடத்தை தங்களது நண்பர்களிடம் நேரடியாக பகிர்ந்துகொள்ள முடியும். இந்த தொழில்நுட்பம் கூகுள் மேப்ஸ், டெலிக்ராம், ஐ மெஸேஜ், ஸ்நாப் ஷாட் உள்ளிட்ட செயலிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவை. எனினும் வாட்ஸ்-அப் செயலி இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளதால், இது மக்களிடம் அதிக பயன்பாட்டைப் பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இருப்பினும் வாட்ஸ்-அப் செயலில் உள்ள நீலநிற டிக்மார்க், ஸ்நாப் ஷாட் போன்ற வசதிகளைப் போல, இந்த ‘லைவ் லொகேஷன்’ தொழில்நுட்மும் பயனாளர்களுக்கு இன்னல்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com