ஃபேஸ்புக்கை விட வாட்ஸ்அப் தான் டாப்

ஃபேஸ்புக்கை விட வாட்ஸ்அப் தான் டாப்
ஃபேஸ்புக்கை விட வாட்ஸ்அப் தான் டாப்
Published on

ஃபேஸ்புக்கை விட வாட்ஸ்அப்-இல் தான் அதிகமாக செய்திகள் பகிரப்படுகின்றன என்று டிஜிட்டல் நியூஸ் ரிப்போர்ட் 2017 ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

வாட்ஸ்அப் பயன்பாடு பேஸ்புக்கை ஓரங்கட்டியுள்ளது. குறிப்பாக செய்திகளைப் பகிர்வதில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கை பின்னுக்குத் தள்ளியுள்ளது. 5 கண்டங்களில், 30 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வைத் தொடர்ந்து வெளியான டிஜிட்டல் நியூஸ் ரிப்போர்ட் 2017 என்ற ஆய்வறிக்கையில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

வாட்ஸ்அப் செயலியின் மூலம் 15 சதவீதமும், பேஸ்புக் மெசஞ்சர் மூலம் 8 சதவீதமும், ஸ்நாப்சாட், வைபர் மூலம் 2 சதவீதமும், வீசாட் மூலம் 1 சதவீதமும் செய்திகள் பகிரப்படுகின்றன என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. 

அதிகபட்சம் மலேசியாவில் 51 சதவீதம் பேர் வாட்ஸ்அப் மூலம் செய்திகளைப் பகிர்கின்றனர் எனவும் அமெரிக்காவில் 3 சதவீதம் மட்டுமே செய்திகளைப் பகிர்கின்றனர் எனவும் அந்த ஆய்வு கூறுகின்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com