உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகிறார்கள். வாட்ஸ்அப் இல்லாத நபரே இல்லை என்று சொல்லும் அளவுக்கு வாட்ஸ் அப் பயன்பாடு எங்கும் எதிலும் உள்ளது.
மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப், தமது பயனர்களை கவரும் விதமாக அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது குறுகிய வீடியோ மெசேஜ் அனுப்பும் வகையில் ஒரு புதிய வசதியை கொண்டு வந்துள்ளது வாட்ஸ்அப். இதன் மூலம், நாம் ஒருவருக்கு வீடியோ மூலம் நமது தகவல்களை எளிதாகப் பகிர்ந்துக் கொள்ளலாம்.
இந்த இன்ஸ்டாண்ட் வீடியோ மெசேஜ் வசதி, டெக்ஸ்ட் பாக்ஸ் ஆப்ஷனுக்கு அருகில் இருப்பதாகவும், இதனை பயன்படுத்தி பயனர்கள் 60 வினாடிகள் வரை பேசி வீடியோவாக மற்றவர்களுக்கு அனுப்பிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான வீடியோவாக இல்லாமல் இதை வேறுபடுத்திக் காட்ட இது வட்ட வடிவில் காட்டப்படும்.
இந்த அம்சமானது ஒருவருக்கு நாம் டெக்ஸ்டாக அனுப்பும் நேரத்தை குறைப்பதோடு, எளிதாக புரியக்கூடிய வகையில் இருக்கும் தெரிகிறது. இந்த புதிய அம்சம் விரைவில் அனைத்து பயனர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிறந்தநாள் வாழ்த்து தொடங்கி, மகிழ்ச்சியைப் பகிர்வது வரை பலருக்கும் இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும் என்கிறது வாட்ஸ் அப்.