’இனி வீடியோ காலில் இத்தனை அம்சங்கள் இடம்பெறும்’- WhatsApp அறிமுகப்படுத்தும் AR ஃபில்டர்ஸ் அப்டேட்!

வாட்ஸ்அப் வீடியோ காலில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது மெட்டா நிறுவனம்.
வாட்ஸ்அப் அப்டேட்
வாட்ஸ்அப் அப்டேட்web
Published on

வாட்ஸ்அப் செயலியானது தொடர்ந்து தங்களுடைய வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. அந்த வரிசையில் AI-ஐப் பயன்படுத்தி வீடியோகால் அழைப்புகளில் AR ஃபில்டர்ஸ் மற்றும் எஃபக்ட்ஸ்களைச் சேர்ப்பதன் மூலம் வீடியோகால் பேசும் அனுபவத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளது.

வாட்ஸ் அப் பயனாளர்களின் சின்ன சின்ன விருப்பங்களுக்கு கூட முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் செயல்பட்டு வரும் மெட்டா, இந்த புதிய அப்டேட்டில் “AR Filters and Effects, Background Blurring and Effects, Low Light and Touch Up” முதலிய 3 அம்சங்களை முக்கியமாக அறிமுகப்படுத்துகிறது.

வாட்ஸ்அப் அப்டேட்
சென்னை | மதுபான பாரில் GPAY மூலம் மோசடி.. வடமாநில ஊழியர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு! என்ன நடந்தது?

அப்டேட்டின் சிறப்பம்சம் என்ன?

இந்த புதிய அம்சத்தின் மூலம் நீங்கள் இருக்கும் இடத்தை பற்றிய கவலை இல்லாமலும், மேக்கப் போடவில்லையே என்ற கவலை இல்லாமலும் நினைத்த நேரத்தில் ஆரோக்கியமான வீடியோகால் உரையாடலை நிகழ்த்த முடியும். இது ஏற்கனவே ஆன்ட்ராய்ட் பயனாளர்களுக்கு கிடைக்கும் நிலையில், ஐபோன் பயன்பாட்டாளர்களுக்கு கிடைக்கும் வகையில் அப்டேட் அறிமுகம் செய்யப்படவிருக்கிறது.

WhatsApp
WhatsApp

இந்த அப்டேட்டில் “AR Filters and Effects, Background Blurring and Effects, Low Light and Touch Up” முதலிய 3 அம்சங்கள் முக்கியமாக இடம்பெற்றுள்ளன.

AR Filters and Effects: வாட்ஸ்அப்-ஆனது வீடியோகாலில் புதிதாக AR ஃபில்டர்ஸ் மற்றும் எஃபக்ட்ஸை அறிமுகம் செய்கிறது. இந்த அப்டேட்டானது பயனர்கள் வீடியோ அழைப்புகளின் போது மாறும் முக மேலடுக்குகளுடன் தங்கள் தோற்றத்தை மாற்ற அனுமதிக்கிறது. ஜூலை முதல் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஏற்கனவே கிடைக்கும் இந்த அம்சம், தற்போது ஐ-போன்களுக்கு வருகிறது.

Background Blurring and Effects: இந்த அம்சங்கள் ஏற்கனவே ஜூம் மற்றும் ஃபேஸ்டைம் போன்ற ஆப்களில் பயன்படுத்தப்படும் நிலையில், அவற்றால் ஈர்க்கப்பட்டு WhatsApp தற்போது அறிமுகப்படுத்துகிறது. இந்த அப்டேட்டானது உங்கள் பின்னணியை மங்கலாக்குகிறது அல்லது வேறு காட்சிகளை பொருத்திக்கொள்ளவும் அனுமதிக்கிறது, இதன்மூலம் தனியுரிமையை உறுதிப்படுத்தவும் அல்லது குழப்பமான அறையை மறைக்கவும் உதவுகிறது.

Low Light and Touch Up: இந்த அப்டேட்டானது இரவு நேர அழைப்புகளில், புதிய லோ லைட் பயன்முறையை AI மூலம் பயன்படுத்தி உங்கள் வீடியோ தரத்தை மேம்படுத்துகிறது, அதே நேரத்தில் டச்அப் அம்சம் நீங்கள் எப்போதும் சிறப்பாகத் தோற்றமளிப்பதை உறுதி செய்கிறது.

வாட்ஸ்அப் அப்டேட்
UPI மூலம் தவறுதலாக வேறு ஒருவருக்கு பணம் அனுப்பிட்டிங்களா? எளிதில் திரும்ப பெறலாம்! விவரம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com