SAM ALTMAN | CHATGPT அடுத்து என்ன..?

OpenAi நிறுவனத்தின் எதிர் காலம் குறித்த சாமின் பார்வையும் நோக்கமும் குறித்து Board Member-களுக்கு உடன்பாடு இல்லை. இதுதான் இத்தனை கடினமான முடிவை எடுக்க வைத்திருக்கிறது.
Sam Altman fired by OPENAI board
Sam Altman fired by OPENAI boardDall E3
Published on

Personal Computer என்ற ஒரு தொழில்நுட்ப புரட்சியை தன்னுடைய கேரேஜில் இருந்து வெளிவந்தபோது ஸ்டீவ் ஜாப்ஸ் துவங்கி வைத்தார், ஆப்பிளின் பர்ஸனல் கம்ப்யூட்டர் பிரிவு வெகுவாக வளர்ந்தது. ஆனால், ஆப்பிள் மரத்தின் வேரில் வெந்நீரை ஊற்றியது போல, திடீரென ஒரு நாள் அவர் துவங்கிய நிறுவனத்தில் இருந்தே அவர் வெளியேற்றப்பட்டார்… வெளியே வந்து பிக்ஸாரை நமக்கெல்லாம் தந்தார். ஆப்பிள் சிக்கலில் சிக்கித் தவித்த போது மீண்டும் அழைக்கப்பட்டு Iphone, Ipod, itunes போன்ற பல தொழில்நுட்ப புரட்சிகளைத் துவக்கிவைத்து ஆப்பிளை ஒரு தொழில்நுட்ப ராட்சஸனாக வளர்த்தெடுத்தார்.

Steve Jobs
Steve Jobs Apple

இப்போ எதுக்கு இந்த கதைனு கேக்குறீங்களா…? இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு ஸ்டீவ் ஜாப்ஸ் வெளியே அனுப்பப்பட்டதைப் போல ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. OpenAi நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் CEO சாம் ஆல்ட்மேன் அவர் பொறுப்பில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார். தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியான செய்திதான் இது.

ஆலன் டூரிங்கின் காலத்துக்கு முன்பிருந்தே, அதாவது சுமார் முக்கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு கருவாக உருவாகி வந்த Artificial Intelligence துறை கடந்த வருடம் நவம்பர் 30-ம் தேதி வரை கணிப்பொறி வல்லுநர்கள், பெரு நிறுவனங்களின் சோதனைச் சாலைகளில் மட்டுமே வளர்ந்து வந்தது.

SAM ALTMAN
SAM ALTMANDAlle3

அதைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்கான ஒரு எளிய வடிவமைப்பு மற்றும் பயன்பாட்டில் ChatGPT என்ற பெயரில் வெளியிட்டது Sam Altman இணை நிறுவனராக இருந்து உருவாக்கிய OpenAi நிறுவனம்.

அறிமுகப்படுத்தப்பட்டது கடந்த ஆண்டாக இருந்தாலும் அதற்கான விதையை அவர் போட்டது 8 ஆண்டுகளுக்கு முன்பு. எலான் மஸ்க், Reid Hoffman (Co-founder of LinkedIn), Peter Thiel (Co-founder of PayPal), Jessica Livingston (Founding partner of Y Combinator), Greg Brockman (OpenAI's co-founder), AWS, Infosys வரை பலருடைய முதலீட்டிலும் இணைந்து Sam Altman Open Ai நிறுவனத்தை உருவாக்கினார்.

கடந்த சில ஆண்டுகளாகவே மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஓப்பன் ஏ.ஐ-யில் தொடர்ந்து முதலீடு செய்துவருகிறது, எவ்வளவு தொகை என்பது வெளியே அறிவிக்கப்படாவிட்டாலும், 10 முதல் 13 பில்லியன் டாலர்கள் வரை முதலீடு செய்திருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இருக்கின்றன. மைக்ரோசாப்ட் மீண்டும் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்த Open AI-ல் அது செய்யும் முதலீடுகளை ஒரு பெரு வாய்ப்பாக பார்க்கிறது. கிட்டத்தட்ட 50%க்கும் அதிகமான முதலீட்டை செய்திருந்தாலும் மைக்ரோசாப்ட்டிற்கு Open Ai-ன் Board-ல் இடம் கிடையாது.

சாம் வெளியேற்றப்படுவது குறித்து அவருக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு தான் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்னொரு இணை நிறுவனராக கிரெக் ப்ராக்மேனுக்கு சில நிமிடங்கள் முன்புதான் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மைக்ரோசாப்ட்டிற்கோ வெளியுலகத்துக்கு தெரியும் போதுதான் தெரிந்திருக்கிறது.

என்னதான் நடக்கிறது? Open AI-ல் என்ன பிரச்சினை?

AI துறையின் அடுத்த பெரிய முன்னெடுப்பாக AGI (Artificial General Intellignece) இருக்கும், அந்த முயற்சிகளின் இறுதிக்கட்டத்தில் Open AI இருப்பதாக செய்திகள் வெளியாகி அந்நிறுவனத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எல்லாருக்கும் இருக்கும் நிலையில் இப்படி ஒரு அதிர்ச்சிகரமான முடிவு ஏன்?

Open Ai தரப்பின் நடவடிக்கை

முதலில், சாம் ஆல்ட்மேன் நீக்கப்பட்ட Open AI தரப்பு விளக்கத்தைப் பார்ப்போம், “சாம் ஆல்ட்மேனின் தலைமை தாங்கும் திறன் மீது Board நம்பிக்கை இழந்துவிட்டது, நிறுவனம் அடுத்தகட்டத்துக்கு முன்னேறும் போது ஒரு புதிய தலைமை தேவைப்படுகிறது. சாம், Board of Director-களுடன் தெளிவாக உரையாடுவது இல்லை, முறையான தகவல்கள் தெரிவிப்பது இல்லை, அவரிடம் வெளிப்படைத் தன்மை இல்லை, இதனாலேயே Board அவர் மீது நம்பிக்கை இழந்தது.” என விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

Sam Altman-ன் நண்பரும், இணை நிறுவனரும் போர்டின் சேர்மேனுமான Greg Brockman அவருடைய பொறுப்பில் இருந்து மட்டும் நீக்கப்படுவதாகவும் அறிவித்திருக்கிறார்கள். அதே சமயம், போர்டின் முடிவை மீறி, அவர் தானாகவே அனைத்து பொறுப்புகளில் இருந்தும், வேலையிலிருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார்.

Sam Altman தரப்பு விளக்கம்

அடுத்ததாக Sam Altman தரப்பு விளக்கத்தைப் பார்ப்போம். முதலில், கொஞ்சம் மென்மையாகவே விளக்கமளித்திருந்தார். Open Ai-ல் பணிபுரிந்த நாள்கள் எப்படி தனக்கு தனிப்பட்ட விதத்தில் உதவின, என மென்மையாக சொல்லிவிட்டு அடுத்தது என்ன என்பது குறித்து பிறகு தெரிவிப்பதாக தெரிவித்தவர். “உயிருடன் இருக்கும் போதே தனக்கான இரங்கல் உரையை வாசிப்பதை போல் உணர்வதாக” அடுத்து அறிவித்தவர். “நான் வெளியே போகனும்னா, என் ஷேர் வேல்யூவின் அடிப்படையில் ஒட்டுமொத்த போர்டும் வெளியேறனும்.” என காட்டமாக பதிவிட்டிருக்கிறார்.

Open Ai-ற்கு அடுத்தது என்ன நடக்கும்?

ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் எலான் மஸ்க், Sam-யை விட மைக்ரோசாப்ட் தான் அதிகமான பங்குகளை சொந்தமாக்கி வைத்திருக்கிறது என தெரிவித்திருந்தார். கிட்டத்தட்ட அதுதான் உண்மையும் கூட. மைக்ரோசாஃப்ட் யாரை ஆதரிக்கிறது என்பதைப் பொறுத்தே அடுத்தடுத்த நகர்வுகள் இருக்கலாம்.

OpenAi-ன் பணியாளர்கள் பலரையும் தேர்ந்தெடுத்து பணியிலமர்த்தியது சாம், அவர்களில் பலரும் நிறுவனத்தைவிட சாமை நம்பியவர்கள். அடுத்தடுத்த நாள்களில் பல பெருந்தலைகள் வெளியேறலாம்.

ஒரு நீண்ட நெடிய சட்டப்போராட்டத்தை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

Q

Sam அடுத்து என்ன செய்யலாம்?

ஆப்பிள் நிறுவனத்தால் பணி நீக்கம் செய்யப்பட்ட போது, ஸ்டீவ் ஜாப்ஸ் கூறியதை இப்போது நாம் கொஞ்சம் நினைவுகூரலாம். " எனக்கு நடந்த நல்ல விஷயங்களில் மிகச்சிறப்பானது ஆப்பிளில் நிறுவனத்தால் வெளியேற்றப்பட்டது தான்" என்றார். அதன் பிறகு தான் PIXAR மூலம் எண்ணற்ற சாதனைகளைச் செய்தார்.

Sam Altman விடவும் திறமையான, தொழில்நுட்ப வல்லுநர்கள் AI துறையில் இருக்கிறார்கள். ஆனால், Sam Altman-ன் பிரபலத்தையும் பெருவாரியான மக்களிடம் அந்தத் தொழில்நுட்பத்தை கொண்டு சென்று சேர்ப்பதற்குமான திறனும் இருக்கக்கூடியவர்கள் வெகு சிலர்தான்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ChatGPT-ன் வளர்ச்சியை கனவு கண்டதுமட்டுமல்லாமல், அதனை பல பெருந்தலைகளை நம்பவும் வைத்து, அவர்களை முதலீடு செய்ய வைத்து OpenAi சாம்ராஜ்யத்தை உருவாக்கத் தெரிந்தவருக்கு, தான் உருவாக்கிய அடித்தளத்தின் மீது இன்னும் ஒரு மாளிகையை கட்டி எழுப்புவது கடினமான பணி இல்லை. அல்லது, மைக்ரோசாப்ட்டின் உதவி மற்றும் தன்னுடைய பங்குகளின் அடிப்படையில் OpenAi நிறுவனத்தை சாம் மீண்டும் தனதாக்கிக் கொள்வதற்கான சட்டப்போராட்டத்தை துவங்குவார்.

சரி என்ன நடந்திருக்கலாம்?

சில தினங்களுக்கு முன்பு Open AI Developer Day நடைபெற்றது. அதில் Custom GPT போன்ற புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பொதுவாக Chat GPT எதை அறிமுகப்படுத்தினாலும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அவற்றில் அதி வேகத்தில் புகுந்து விளையாடுவது சகஜம். அதேபோல எக்கச்சக்க Custom GPTகள் தினம் தினம் ஆயிரக்கணக்கில் வெளியாகி வருகிறது. தமிழில் கூட சில Custom GPT-கள் வெளியாகி உள்ளன.

ஆனால், திடீரென GPT PLUS சேவைக்கான புதிய வேண்டுகோள்களை நிறுத்தி வைப்பதாக சாம் அறிவித்தார். அப்போதே புகை லேசாக கசியத் துவங்கியது.

AGI artificial general intelligence கிட்டத்தட்ட உருவாக்கப்பட்ட நிலையில் அதன் ஆபத்துகள் குறித்தும், போதாமைகள் குறித்தும் சாம் மற்றும் கிரெக்கிற்கு இருக்கும் பார்வையும் போர்ட் மெம்பர்களுக்கு இருக்கும் பார்வையும் வேறு வேறு திசையில் பயணிப்பது மிகப்பெரிய விரிசலை உண்டாக்கி இருக்கலாம்.

OpenAi நிறுவனத்தின் எதிர் காலம் குறித்த சாமின் பார்வையும் நோக்கமும் குறித்து Board Member-களுக்கு உடன்பாடு இல்லை. இதுதான் இத்தனை கடினமான முடிவை எடுக்க வைத்திருக்கிறது.

நெருப்பு, சக்கரம், மின்சாரம், கணினி, இணையம் போன்றவற்றின் கண்டுபிடிப்பாளர்களின் பெயர் பெருவாரியான மக்களுக்குத் தெரியாது, அது கல்விப்புலம் சார்ந்தோர் அறிந்த ரகசியம். ஆனால், அந்தத் தொழில்நுட்பத்தை பெருவாரியான மக்களிடம் கொண்டு சேர்த்தவர்களின் பெயரோ காலங்களைக் கடந்தும் மக்களிடம் புகழுடன் இருக்கும். Sam Altman என்ற பெயரும் அப்படி காலங்களைக் கடந்து நிற்கும். சாட்ஜிபிடியின்  தந்தை மற்றும் "எங்கள் காலத்தின் ஓபன்ஹைமர்" என்று அழைக்கப்படும் சாம் ஆல்ட்மேனை அவ்வளவ்ய் எளிதில் உலகம் மறந்துவிடாது. இன்றைக்கும், அந்தப் புகழை எட்டப்போகும் நாளுக்கும் இடையில் என்ன நடக்கப்போகிறது என்பதை வேடிக்கப் பார்ப்போம்.

இந்தக் கட்டுரையின் பெரும் பகுதி ChatGPT, Google Bard, Duet AI, Copilot, Dalle3 போன்ற AI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது. AI உடன் இனைந்து பணியாற்ற வேண்டிய காலகட்டத்துக்கான கனவு பலருடைய பல்லாண்டு கால கணவு, அதனை பொது மக்களிடம் கொண்டு சேர்த்த Sam Altman-க்கும் OpenAi-ற்கும் இப்போதைக்கு நன்றி, இந்த மனக்கசப்புகளைத் தாண்டி மீண்டு வாருங்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com